இந்தியா முழுவதும் 1 இலட்சத்து 66 ஆயிரத்து 882 பாலியல் வழக்குகள் தேக்கம்..! நீதிவழங்க எடுக்கப்பட்ட முயற்சி என்ன?.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. இவ்வாறான அநீதிகளை குறைப்பதற்கு அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதற்காக பல நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுமார் 1 இலட்சத்து 66 ஆயிரத்து 882 பாலியல் வன்கொடுமை வழக்குகள் வருடங்கள் கடந்தும் நிலுவையில் உளது. இந்த வழக்குகளில் சுமார் 389 மாவட்ட நீதிமன்றத்தில்., 100 க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்து., உடனடியாக தண்டனை வழங்கப்பட சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் வேண்டும் என்ற கோரிக்கையை., மத்திய நிதி அமைச்சகத்திற்கு சட்டத்துறை அமைச்சகமானது பரிந்துரை செய்திருந்தது. இதன் அடிப்படியில்., சிறப்பு நீதிமன்றங்களை வரும் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் தொடங்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped, பாலியல் வன்கொடுமை,

இந்த சமயத்தில்., சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ஆகும் செலவு பணமான ரூ.767.25 கோடியினை ஒதுக்கீடு செய்து., சுமார் 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும்., இந்த தொகையில் ரூ.474 கோடியினை "நிர்பயா நிதி" தொகுப்பின் கீழ் மத்திய அரசானது வழங்கியது. 

இவ்வாறான 1023 நீதிமன்றங்களில் 634 நீதிமன்றத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் விசாரணை செய்யப்படும் என்றும்., சிறப்பு நீதிமன்றங்கள் அனைத்தும் வருடத்திற்கு குறைந்தளவு 165 வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பளிக்கவும் மத்திய சட்டத்துறை அமைச்சகம் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian govt plan to complete bending sexual abuse case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->