கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று.! 26 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 9355 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், தற்பொழுது தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகிறது. நேற்று 9 ஆயிரத்து 629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 9355 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இது தினசரி நேர்மறை விகிதம் 4.08% ஆக பதிவாகியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் 26 பேர் உயிரிழந்த நிலையில், இதில் கேரளாவில் மட்டும் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,410 ஆக குறைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India logs 9355 fresh Covid infections 24 hours


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->