இந்தியாவின் சர்வதேச எல்லை பகுதியின் பாதுகாப்பு - அமித்ஷா ஆய்வு! - Seithipunal
Seithipunal


குஜராத்துக்கு மத்திய மந்திரி அமித்ஷா இரண்டு நாட்கள் பயணமாக சென்றார். அங்குள்ள எல்லை கண்காணிப்பு சாவடி பகுதி மற்றும் குஜராத் ஹராமி நாலா பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். 

அங்குள்ள எல்லை பாதுகாப்புபடை ஆயுதங்களை பார்வையிட்டு கட்ச் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பட்டையின் வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

இந்த வளாகம், ரூ. 257 கோடி செலவில் கட்டப்படும் எனவும் அதில் நிர்வாக கட்டிடம், உணவகம், அலுவலர்கள் மெஸ், பயிற்சி மையம் மற்றும் 450 க்கும் மேற்பட்ட உபகரணங்களை பராமரிக்கும் பணிமனை போன்றவை அடங்கும். 

மேலும் அவர் ஹராமி நாலா மற்றும் எல்லை புறக்காவல் நிலையத்தை பார்வையிட்டு மேற்கில் உள்ள இந்தியாவின் சர்வதேச எல்லை பகுதிக்கு சென்று, அங்குள்ள பாதுகாப்பின் நிலையை ஆய்வு செய்தார். 

பாதுகாப்பு படையினருக்கு இந்த எல்லையில் ஏழு கண்காணிப்பு கோபுரங்களை உருவாக்க இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India International Border Area Security Amit Shah 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->