இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக யுஜிசி அறிவிப்பு.! மாணவர்கள் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பல்கலைக்கழக மானியக்குழு யுஜிசி செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி அதிகாரமில்லாத பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருவது தெரிந்தது. இப்போதைக்கு நாட்டில் 23 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இல்லாமல் பெயரளவுக்கு சுயமாக வடிமைத்து கொண்டு போலியாக செயல்பட்டு வந்தது வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் இந்த பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு யுஜிசி சார்பாக  கேட்டுக் கொள்கிறோம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 23 பல்கலைகழகத்தில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன இதில் ஒரு பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அடுத்தபடியாக டெல்லியில் 7 பல்கலைக்கழகங்கள், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா 2 பல்கலைக்கழகங்களும் உள்ளன. மேலும் கேரளா கர்நாடகா, மராட்டியம் மற்றும் புதுச்சேரியில் ஒரு அங்கீகாரமற்ற பல்கலைக்கழகம் உள்ளது.

இந்த பல்கலைக்கழகங்களில் பெயர்களையும் யுஜிசி வெளியிடப்பட்டுள்ளது புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ போதி அகாடமி  ஆப்  ஹையர் எஜிகேஷன், கர்நாடகாவில் பாதகாவி சர்க்கார் வேர்ல்டு ஓபன் யூனிவர்சிட்டி எஜுகேஷன் சொசைட்டி,  கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் யூனிவர்சிட்டி, மராட்டியத்தில் ராஜா அரபிக் யூனிவர்சிட்டி ஆகியவை அங்கீகாரமற்றவை.  ஆகியவை அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதை குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india having 23 fake universities


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->