தமிழக காவல்துறையை பின்பற்றிய தெலுங்கானா காவல் துறையினர்.. கரோனா விழிப்புணர்வு..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலும் கரோனா வைரஸின் தாக்கம் பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் ஏப்ரல் 14 வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற பணிகளுக்கு வெளியே வர அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் காவல் துறையினர் கொரோனா தொடர்ப்பன விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, விதிகளை மீறும் மக்களுக்கு நூதன தண்டனை மற்றும் வழக்குப்பதிவுகள் போன்றவை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸிற்கு தற்போது வரை 1397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் பலியாகியுள்ளனர். 

காவல் துறையினர் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை பலவழிகளில் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக காவல் துறை அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொரோனா போன்ற உருவத்துடன் கூடிய தலைக்கவசம் அணிந்து வந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலானது. 

இந்த நிலையில், இதனைப்போன்று தெலுங்கானா காவல் துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு, கொரோனா தலைக்கவசங்களை தயாரித்துள்ளனர். இன்று காலை தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகர் காவல் ஆணையர் அஞ்சனி குமார் தலைமையில், போக்குவரத்து காவல் துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து புறப்பட்டு சென்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Telangana city commissioner create awareness about corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->