பள்ளியில் பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய ஆசிரியர்.! வெளியான கொடூரத்தின் வீடியோ காட்சிகள்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான தொடர் அநீதிகள் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளில் பெரும்பாலானவை பெண்களுடன் நன்கு பழகிய மற்றும் தெரிந்த நபர்களால் இழைக்கப்பட்டு வரும் கொடூரமானது பெரும் அதிர்ச்சியை அதிகளவு பதிவு செய்துள்ளது. 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளில் இருந்து சிறுமிகள் வரை என அனைவருக்கும் பாலியல் தொல்லைகள் வழங்கும் துயரமானது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனால் அரங்கேறிய கொலைகளும்., கொடூரங்களின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் துடிதுடித்து உயிரிழந்த சோகமும் நம்மை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. 

இந்த நிலையில்., மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பள்ளியில் பயின்று வரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கும் வீடியோ காட்சிகளானது இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. மும்பைக்கு அருகில் இருக்கும் கோவண்டி பைகன்வடி பகுதியில் பள்ளியானது செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் ஆசிரியனாக பணியாற்றி வரும் காம கொடூரன் பள்ளியில் பயின்று வரும் சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை வழங்கும் வீடியோ காட்சிகள் பெரும் அதிரவலையை பதிவு செய்துள்ளது. 


இந்த வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இதனை கண்ட மும்பை காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., கொடூரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai teacher sexual harassment girl police action immediately


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->