இவர்களுக்கெல்லாம் நாங்கள் பிரச்சனையின் போது ஆதரவாக இருந்துள்ளோம்.. சாம்னா நாளேடு அதிரடி.!! - Seithipunal
Seithipunal


மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவசேனாவின் எம்பி சஞ்சய் ராவத் பேசியதை அடுத்து இரண்டு சர்ச்சைகளில் அடுத்தடுத்து சிக்கியுள்ளார். 

இது தொடர்பாக, புனேயில் வைத்து அவர் பேசும்போது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மும்பையில் இருக்கும் உலக தாதாக்களுடன் சந்தித்து பேசியுள்ளார் என்று கூறினார்.  

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், தற்போது கூறிய கருத்து காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பான கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்த நிலையில், பஞ்சாபை சார்ந்த பாஜக தலைவர் ஜெய் பகவான் கோயல் எழுதியுள்ள "இன்றைய சிவாஜி மோடி" என்ற புத்தக விவகாரத்திலும் தலையிட்டு, பாஜகவை சார்ந்த ராஜே போஸ்லேவுக்கு சவால் விடுத்துள்ளார். 

இது தொடர்பான் சஞ்சய் ராவத்தின் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் கூறியிருப்பதாவது, 

மகாராஷ்டிர மாநிலத்தின் மன்னர் சத்ரபதி சிவாஜி மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் பெயருக்கு சிவசேனா எந்த நேரத்திலும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருந்ததில்லை. பாஜக தற்போது பிற பணிகள் இல்லாது, பிரச்சனைகளை தோண்டியெடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in maharastra sanjay rawat speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->