அத்தியாவசிய தேவைக்கு அல்லாடும் கிராமம்... கண்ணீருடன் கிராம மக்கள்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்பட துவங்கியுள்ளது. இந்தியாவில் தற்போதுவரை கடந்த 24 மணிநேரத்தில் 704 கரோனா உறுதி செய்யபட்டுள்ளது. மேலும், 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அனுதினமும் கரோனாவின் தாக்கமானது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிற நிலையில், வருகிற இரண்டு வாரத்தினை கடந்துவிடும் பட்சத்தில் மிகபெரிய பாதிப்பு இருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையானது கடந்த 24 மணிநேரத்தில் அதிகரித்துள்ள நிலையில், 704 பேர் கரோனா வைரஸின் தாக்கத்துடன் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மத்திய அரசும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மொத்தமாக 4281 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 111 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் பணி செய்து குடும்பம் நடத்தி வந்த அனைவரும் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், பெரும்பாலான அத்தியாவசிய வசதிகள் கூட இல்லாத கிராமப்புறங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் உள்ள தேவ்கான் கிராமத்தில் குடிநீருக்கான வசதி இருந்தும், தெருக்குழாய்களில் குடிநீர் அனுப்பப்படவில்லை என்பதால், அங்குள்ள கிணற்றை குடிநீருக்கு மக்கள் உபயோகம் செய்து வருகின்றனர். மேலும், அனைவரும் ஒரே நேரத்தில் கூடுவதால் மக்களுக்குள் அச்சம் எழுந்து, கரோனா பரவிவிடுமோ என்ற பயமும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Maharashtra Nashik peoples struggled water problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->