நூதன தண்டனை கொடுத்து, மெழுகுவர்த்தியை வழங்கிய காவல்துறை.. சுவாரசிய சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அடுத்தடுத்து உயரும் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். 

இந்தியாவின் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரளா அதிகளவு கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. 

கரோனா வைரசை கட்டுக்குள் வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு போன்றவை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 

கரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறாமல் இருக்க மக்களின் நடமாட்டத்தை குறைக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களுக்கு காவல் துறையினர் நூதன தண்டனை மற்றும் வழக்குப்பதிவுகள் போன்றவற்றை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுர்கி பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியின் போது ஊரடங்கு உத்தரவை மீறிய நபர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இறுதியாக ஊரடங்கை மீறியதற்கு அனைவரிடமும் மெழுகு வர்த்தி வழங்கப்பட்டு, பிரதமரின் அறிவுறுத்தல்படி நாளை இரவு மெழுகுவர்த்தி ஏற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Karnataka police punished violators give candle


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->