பாலியல் வன்கொடுமையை 95 விழுக்காடு நிகழ்த்துவது இவர்கள்தான்.!! வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தேசிய குற்ற ஆவண காப்பகமானது குற்ற சம்பவங்களின் அறிக்கையியொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி., இந்தியாவில் சுமார் 30 ஆயிரத்து 299 கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில்., 3 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். 

இதில் சுமார் 16 ஆயிரத்து 591 கற்பழிப்பு வழக்கில் பெண்களின் குடும்ப நபர்கள்., முதலாளிகள் மற்றும் அறியப்பட்ட நபர்கள் என்று இருந்துள்ளது. மேலும்., இவர்களில் 10 ஆயிரத்து 553 வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் நண்பர்கள் மற்றும் இணயத்தள நண்பர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்மணியின் பங்காளிகள் அல்லது முன்னாள் கணவனாக இருந்துள்ளனர். 

கடந்த 2017 ஆம் வருடத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் 5 ஆயிரத்து 562 வழக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில்., இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் 97.5 விழுக்காடு அளவிலான குற்றங்கள் உறவினர்களால் நிகழ்ந்தவை என்பது தெரியவந்தது.  

sexual harassment, sexual abuse, sexual torture,

மேலும்., மராட்டிய மாநிலத்தை பொறுத்த வரையில் தெரிந்த நபர்களாலேயோ அல்லது தெரியாத நபர்களாலேயோ கூட்டுப்பலியால் வன்கொடுமை 98.1 விழுக்காடு அளவில் பதிவாகியுள்ளது. மணிப்பூரில் சுமார் 40 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும்., பாலியல் வன்கொடுமை பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு தெரிந்த நபர்களாலேயே அதிகளவு குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. சுமார் 95 விழுக்காடு அளவிலான குற்றங்கள் தெரிந்த நபர்களாலேயே நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in india sexual harassment girl affected by 95 percentage relations


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->