மருத்துவமனையில் நடந்த கொடூரம்...! சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு மயக்க ஊசி போட்டு மருத்துவர் செய்த அத்துமீறல்...!
horror that happened hospital doctor violated law by administering anesthetic student who came treatment
லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 18-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை, அங்கு பணியாற்றி வந்த விஜய் கிரி என்ற மருத்துவர் அறுவை சிகிச்சை அறைக்குள் அழைத்துச் சென்று மயக்க ஊசி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயக்க நிலையில் இருந்த மாணவியிடம் மருத்துவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மயக்கம் தெளிந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடூர அனுபவத்தை பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், மருத்துவமனையில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்தனர்.
மேலும், மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த துணை முதல்-மந்திரியும் சுகாதாரத்துறை மந்திரியுமான பிரஜேஷ் பதக், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உடனடியாக சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மருத்துவர் விஜய் கிரியின் மருத்துவப் பணியுரிமையை தற்காலிகமாக ரத்து செய்யவும், அவரது மருத்துவ பட்டச் சான்றிதழை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
horror that happened hospital doctor violated law by administering anesthetic student who came treatment