பெண்கள் மட்டுமே பணியாற்றும் வங்கி.! எச்.டி.எப்.சி வங்கியின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள எச்டிஎப்சி வங்கி ஒன்றில் மகளிர் மட்டுமே பணியாற்றும் விதமாக புதிய கிளை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 

இந்த கோழிக்கோடு எச்டிஎப்சி கிளை கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதில், தற்போது 4 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மார்ச் 31 கணக்குப்படி வங்கியில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாக தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இந்த மகளிர் மட்டும் கிளை துவங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 31 நிலவரத்தில் 21.7 விழுக்காடு மட்டுமே வங்கியில் பணியாற்றும் பெண்கள் இருப்பதாலவும், 2025 இல் இதனை 25 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வங்கி கிளை திறக்கப் பட்டுள்ளதாகவும் எச்டிஎப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து எச்டிஎஃப்சி நிறுவனத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hdfc women Staffs bank started in kerala


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->