அந்த 201 ரூபாயில அப்படி என்னதான்பா இருக்கு... அம்மாவின் மருத்துவ சிகிச்சை! இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞன்..! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல் சிங். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு முகம் தெரியாத நபருடைய அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்வதற்காக 201 ரூபாயை ஃபோன்பே மூலம் அனுப்பியிருக்கிறார். 

இதையடுத்து, “என்னால் முடிந்த சிறிய உதவி. அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குறுஞ்செய்தியையும் அனுப்பியுள்ளார். அந்தப்  பணத்தைப் பெற்ற அந்த நபர், கமல் சிங்குக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். சிறிது நாட்களுக்குப் பிறகு இதனை மறந்து கமல் சிங் தனது வேலையை பார்த்தார்.

இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதியன்று கமல் சிங்கின் ஃபோன்பே கணக்கில் திடீரென 201 ரூபாய் கிரெடிட் ஆகியுள்ளது. அப்போது இந்த பணத்தை யார் அனுப்பியது என்று கமல்சிங்குக்கு தெரியாமல் இருந்தது. அதன் பிறகு, பணம் வந்த குறுஞ்செய்தியை திறந்து பார்த்தபோது கமல் சிங்குக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

ஒன்றரை வருடங்களுக்கு முன், முகம் தெரியாத நபரின்  அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு கமல்சிங் அனுப்பிய 201 ரூபாயை அந்த நபர் திருப்பி அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த கமல் சிங் அவருடைய அம்மாவின் உடல்நலத்தைப் பற்றி விசாரித்து மெசேஜ் அனுப்பினார்.

இது குறித்து கமல் சிங் தெரிவித்ததாவது, “என்னுடைய ஃபோன்ஃபே கணக்கில் 201 ரூபாய் கிரெடிட் ஆனதை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. ஆனால், யாரிடமிருந்து வந்தது என்பது தெரியவில்லை. அதன் பின்னர், அந்த குறுஞ்செய்தியை பார்த்த பொது, அதில் நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு சமூக வலைதளத்தில் ஒரு கிரவுட் ஃபண்டிங் கோரிக்கைக்காக ஒரு நபருக்கு என்னால் முடிந்த தொகையை அனுப்பினேன்.” என்பது தெரிய வந்தது.

அந்த பணத்தை திருப்பி அனுப்பிய நபர் தெரிவித்ததாவது, "அம்மா நலமாக இருக்கிறார். என்னுடைய வணிகமும் நன்றாக இருக்கிறது. அதனால்தான், எனக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்தவர்களிடம் இருந்து தான் பெற்ற பணத்தை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறேன். நன்றி" என்று பதில் அனுப்பினார். 

இந்த உரையாடலை, கமல் சிங் அவருடைய சமூக ஊடக கணக்கில் பதிவிட்டு, அந்த நபரை பாராட்டியுள்ளார். இந்த நிகழ்வு தற்போது வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

haryana state young man help in 201 amount


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->