திருமணம் ஆகாதவர்களுக்கு ₹2,750 ஓய்வூதியம்.!! ஹரியானா மாநில அரசு அதிரடி.!! - Seithipunal
Seithipunal


அரியானாவில் முதியோர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது போல திருமணமாகாதவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் கூடிய விரைவில் அமலுக்கு வர உள்ளது. ஆண்கள் இந்த ஓய்வூதியம் பெற சில நிபந்தனைகள் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,:

1) திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் 45 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள் 40 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

2) அவர்களின் ஆண்டு வருமானம் 1.80 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் திருமணமாகாதவர்கள் சுமார் 1.25 லட்சம் பேர் மாதந்தோறும் 2,750 ரூபாய் ஓய்வூதியம் பெற உள்ளனர். திருமணமாகாதவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்க ஹரியானா அரசு முடிவு செய்திருப்பது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெண் குழந்தைகள் மட்டும் உள்ள ஒரு வீட்டில் பெற்றோர்களின் ஒருவர் உயிரிழந்தாலும் உதவித்தொகை வழங்கும் திட்டம் ஹரியானாவில் அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana govt announced pension for unmarried people


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->