நீதிபதியை அவமதித்த வழக்கு.. குருமூர்த்தி மன்னிப்பு கேட்டதால் விடுதலை.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2018 ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நீதிபதி முரளிதர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இடைக்கால பாதுகாப்பு வழங்கியது. இதற்கு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியும் பாஜக ஆதரவாளமான குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "நீதிபதி முரளிதர் மூத்த வழக்கறிஞராக இருந்தபோது ப.சிதம்பரம் ஜூனியரா? என்று கேள்வி எழுப்பி விமர்சனம் செய்திருந்தார்.

குருமூர்த்தியின் இந்த விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வழக்கறிஞர் சங்கத்தினர் கடந்த 2018 ஆம் ஆண்டு குருமூர்த்திக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுல் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வந்தது.

இந்த வழக்கத் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி ப.சிதம்பரத்திற்கும் எந்த விதமான உறவும் இல்லை என்றும், அவர் தனது ஜூனியராக பணிபுரிந்ததில்லை என்றும் நீதிபதி திட்டவட்டமாக தெளிவுபடுத்தினார்.

 

மேலும் குருமூர்த்தி தன் சொந்த விருப்பத்தின் பேரில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததோடு, குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ட்வீட்களையும் குருமூர்த்தி நீக்கியதாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி குருமூர்த்தியின் மன்னிப்பு மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நீதிபதி எஸ்.முரளிதருக்கு எதிரான அவரது ட்வீட் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் அவமதிப்பு வழக்கில் இருந்து டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gurumurthy acquitted from judge contempt case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->