காதல் திருமணத்திற்கு கிடக்கு பிடி! இந்த நிபந்தனை விதிக்க திட்டம்.!! மாநில முதல்வர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் ஹெக்சானாவில் படிதார் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான சர்தார் பட்டியல் குழுமம் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் "திருமணத்திற்காக சிறுமிகள் ரகசியமாக வீட்டை விட்டு செல்லும் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் பட்டேல் என்னிடம் கோரிக்கை வைத்தார்.

காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயம் என்ற நிலையை உருவாக்க முடியுமா? என்பது குறித்தும் ஆராய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசியலமைப்புச் சட்டம் இதை ஆதரித்தால் நிச்சயமாக இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு சிறப்பு முடிவை பெற முயற்சி செய்வேன்" என தெரிவித்துள்ளார்.

பாஜக முதல்வரின் இத்தகைய அறிவிப்பை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இம்ரான் கேதாகாலா வரவேற்பு தெரிவித்துள்ளார். பாஜக அரசு இத்தகைய சட்டத்தை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினால் அதற்கு ஆதரவு அளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat govt study in parents consent compulsory for love marriage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->