உத்ரகாண்டில் கொடூரம் - ஆப்சென்ட் போட்டதாக வங்கி மேலாளரை தீ வைத்து கொளுத்திய காவலாளி கைது.! - Seithipunal
Seithipunal


உத்ரகாண்டில் கொடூரம் - ஆப்சென்ட் போட்டதாக வங்கி மேலாளரை தீ வைத்து கொளுத்திய காவலாளி கைது.!

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளராக முகமது ஓவைசி பணிபுரிந்து வருகிறார். அதேபோல், இந்த வங்கியின் காவலாளியக ஜம்மு-காஷ்மீர் ரைபல்ஸ் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற தீபக் கெஷெத்ரி என்பவர் பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தீபக் நேற்று பணிக்கு வராத காரணத்தினால் வங்கி மேலாளர் வருகை பதிவேட்டில் அவருக்கு ஆப்செண்ட் என்று பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபக் வங்கிக்கு சென்று மேலாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் மேலாளரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரித் தெரிவித்ததாவது, ”சம்பவம் குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், போலீஸார் விரைந்துச் சென்று குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்தனர். 

அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு பிறகு காரணம் என்னவென்று தெரியவரும் “ என்றுத் தெரிவித்துள்ளார். வங்கி மேலாளர் மீது வாங்கி காவலாளி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

guard arrested for fire on sbi bank manager in uttarkant


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->