வதந்தியால் பெண்ணை அடித்து உதைத்த கொடூரம்.. கண்ணீருடன் பெண் வெளியிட்ட வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 378,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,510 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 

இந்தியா முழுவதிலும் கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த வைரஸால் இந்தியாவில் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் தீவிரத்தை தவிர்த்து, இணையதளத்தில் கரோனா வைரஸ் தொடர்பான வதந்திகள் அதிகளவு பரவியுள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி கண்ணீருடன் வீடியோ பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண்மணி விமானத்தில் பணியாற்றி வரும் நிலையில், இந்த பெண்மணி தனது தாயாருடன் வசித்து வருகிறார். 

தற்போது கரோனா வைரஸ் அதிகளவு பரவிவரும் காரணத்தால், இவரது பணியை வைத்து இவருக்கு கரோனா பரவியுள்ளது என்று கூறி அக்கம் பக்கத்தினர் விரட்டி அடித்துள்ளனர். இந்த துன்புறுத்தல் படித்த நபர்களால் கூட தனக்கு நிகழ்ந்துள்ளது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. எனக்கு கரோனா இல்லை. தேவையில்லாமல் வதந்தியை பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார் என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl cried and speech about did not spread rumors


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->