நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை மதுபானம் விற்கத் தடை - மாநகராட்சி அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தலைநகரான டெல்லியில் நாளை முதல் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கும் டிசம்பர் 4ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 7ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

இந்த நிலையில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நாளை முதல் (டிசம்பர் 2ஆம் தேதி ) டிசம்பர் 4ம் தேதி வரை மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் டிசம்பர் 7ஆம் தேதியும் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

From tomorrow to December 4 liquor do not sale in Delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->