பாறை மீது ஏறி செல்பி எடுத்த இளைஞர்கள்.!! கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பாறை மீது ஏறி செல்பி எடுத்த இளைஞர்கள்.!! கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்.!

பிரபல சுற்றுலா தலமான கோவாவின் குவேரிம் கடற்கரையில் நேற்று செல்ஃபி எடுப்பதற்காக பாறைகளின் மீது நான்கு பேர் ஏறியுள்ளனர். அப்போது கடலில் இருந்து மிகப்பெரிய அலை பாறைகளைத் தாக்கியது. இதில், நான்கு பேரும் கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நான்கு பேரின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்ததாவது,  20-22 பேர் கொண்ட குழு குவேரிம் கடற்கரையிலிருந்து அரம்போல் ஸ்வீட் ஏரியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, ’செல்ஃபி எடுக்கும் பகுதி இல்லை’ என்ற எச்சரிக்கை பலகையை கவனிக்காமல், நான்கு நபர்கள் பாறைகள் மீது ஏறி நின்று செல்பி எடுத்துள்ளனர்.

அப்போது திடீரென பாறைகளைத் தாக்கிய மிகப்பெரிய அலையினால் அவர்கள் நான்கு பேரும் கடலில் விழுந்தனர். இதையறிந்தவுடன் பணியில் இருந்த மீட்புப் படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினார்” என்று தெரிவித்தார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four youths died in gova beach


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->