அய்யப்ப பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய கேரள போலீசார் - நான்கு பேர் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் கேரளாவின் எல்லையான குமுளியில் கேரள கலால்துறையின் சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. இங்கு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு பின்னர் கேரளா மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படும். தற்போது சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். 

இந்நிலையில், இங்கு வாகனங்களை சோதனை செய்யும் கலால்துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதையறிந்த லஞ்சஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ.14,120 பணம் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதனை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்து அவ்வப்போது பணியில் இருந்த கலால்துறை தலைமை காவலர் ஜார்ஜ்ஜோசப், தடுப்புஅலுவலர்கள் ரவி, ரஞ்சித் மற்றும் ஜேம்ஸ்மேத்யூ உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டது. 

அதன் படி, கலால்துறை ஆணையர் அவர்கள் பணியில் இருந்த நான்கு அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதே சோதனைச்சாவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்ப பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து துணை தலைமை காவலர் உள்பட இரண்டு பேரை லஞ்சஒழிப்புத்துறை  போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four police officers suspend for bribe to sabarimala devotes


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->