எடியூரப்பாவை புறக்கணித்து கர்நாடக ஆட்சி நடந்திடுமா?. தேவே கவுடா பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசுக்கு நெருக்கடி வந்தால் ஒத்துழைப்பு கொடுப்போம், எடியூரப்பாவை புறக்கணித்து கர்நாடகாவில் ஆட்சி நடத்த முடியாது என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னாள் முதல்வர் தேவேகவுடாவை பெங்களூரில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து தேவே கவுடா செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " முதலமைச்சர் பசவராஜ் பொம்மை என்னை நேரில் சந்தித்து பேசினார். அவருக்கு நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவரது தந்தை எஸ்.ஆர் பொம்மையும், நானும் நெருங்கிய நண்பர்கள். ஒரே கட்சியில் நாங்கள் பணியாற்றினோம். 

எங்களின் நட்பு மற்றும் கட்சி பயணங்கள் போன்றவை பசவராஜ் பொம்மைக்கு நன்றாக தெரியும். கர்நாடக மக்களுக்கு நல்லாட்சி வழங்க அறிவுரை தெரிவித்தேன். மாநில பிரச்சனைகளில் பசவராஜ் பொம்மை அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். 

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை நீக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் 75 வயதுள்ளவர்களுக்கு ஓய்வு வழங்கப்படுகிறது. ஆனால், எடியூரப்பாவுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டு 2 வருடம் முதல்வர் பதவியில் நீக்க அக்கட்சி மேலிடம் அனுமதி வழங்கியது. 

எடியூரப்பா பதவியில் இருக்கையில், அவரது தலைமையில் ஆட்சி நடக்கையில் நாங்கள் எந்த தொந்தரவையும் வழங்கவில்லை. கர்நாடகாவில் எடியூரப்பாவை புறக்கணித்துவிட்டு ஆட்சி நடந்த இயலாது. விரைவில் தாலுகா மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். பசவராஜ் அரசுக்கு நெருக்கடி சூழல் வந்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former PM Deve Gowda Pressmeet after KA CM Basavaraj Meets 2 August 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->