விமானத்தை போல, ரயிலுக்கும் புதிய விதிமுறை.! முன்கூட்டியே தெரிந்துகொண்டு செல்லுங்கள்.!  - Seithipunal
Seithipunal


விமானங்களில் அதிகப்படியான சுமை கொண்டு சென்றால், கட்டணம் வசூலிக்கபடுவது வழக்கம். அதுபோனாவே, ட்ரெயினில் கொண்டு செல்ல தற்போது கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் இயங்கும் தேஜஸ் ரயிலில் முதல் கட்டமாக இது நடைமுறைக்கு  .வரகாத்திருக்கின்றது. 

IRCTC நாட்டின் சில முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடங்களில் இயங்கும் ரயில்களை தனியார் வசம் ஒப்படைத்திருந்தது. இந்த நிலையில், ரயில் சேவைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே தொடங்கப்பட்டது. 

இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமான எடையை கொண்டு செல்லும் பயணிகளிடம், தனியாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது. அதன்படி ஏசிசேர் கார் பயணி ஒருவர் 70 கிலோ வரை எடை எடுத்துச் செல்லலாம் என்றும், இந்த வரம்பை மீறினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், சாதாரண சேர் காராக இருந்தால் 40 கிலோ வரை கொண்டு செல்லலாம் என்றும், 12  வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் டிக்கெட்டுக்கு 50 கிலோ லக்கேஜ் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

For travelers who carry excess weight it has been decided to charge them separately


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->