5 வயது சிறுவனின் உயிரை பறித்த ஆழ்துளை கிணறு - ம.பியில் சோகம்.! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூர் அருகே காண்டலா தெவ்ரி கிராமத்தில் விவசாயத்திற்காக இருபது அடி ஆழத்தில் ஆழ்துளை ஒன்று தோண்டப்பட்டிருந்தது. இந்த ஆழ்துளை கிணற்றின் அருகே ஐந்து வயது சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். 

இதற்கிடையே வெளியில் விளையாடிய மகனை காணவில்லை என்று அவனுடைய பெற்றோர் பல இடங்களில் தேடி வந்த நிலையில், கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்தது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். 

அந்தத் தகவலின் படி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் குழி தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

தீயணைப்பு வீரர்களின் கடும் போராட்டத்துக்கு பின்னர் ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டான். உடனே சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five years old boy died fell down bore well in madhya pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->