கடலூர் : காப்பகத்தில் இருந்து சினிமா பணியில் தாபித் சென்ற 5 பேர் - தீவிர வேட்டையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குண்டலப்புலியூர் பகுதியில் அன்புஜோதி ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆசிரமத்தில் முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோர் என்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறனர். 

இந்த நிலையில், ஆசிரமத்தில் சிலர் கானாமல் போனதாகவும், பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார் தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஆசிரமத்தில் இருந்தவர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அரசு அங்கீகாரமுள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் சுமார் 25 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கடந்த மாதம் நான்கு பேர் காப்பகத்தில் இருந்து தப்பியோடி உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் இந்த காப்பகத்தில் இருந்து ஐந்து பேர் தப்பியோடியுள்ளனர். 

இவர்கள் அனைவரும் காப்பகத்தில் வழங்கப்பட்ட போர்வைகளை கயிறாக பயன்படுத்தி மாடியில் இருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து போலீசார் இவர்கள் ஏன் காப்பகத்தில் இருந்து தப்பியோடினார்கள்? இவர்களை யாராவது மிரட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples escaped in cuddalore shelter


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->