வெளுத்து வாங்கும் கனமழை - ஹிமாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


வெளுத்து வாங்கும் கனமழை - ஹிமாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு.!

ஹிமாசல பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஹிமாசல் மாநிலத்தின் அனைத்து ஆறுகளிலும் கனமழை காரணமாக நீர் நிரம்பி காணப்படுகிறது. வானிலை மையம் ஹிமாசல் மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அளித்துள்ளது. 

மாநிலத்தில் கடந்த 36 மணி நேரத்தில் பதினான்கு இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பதின்மூன்று இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் 700 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 

அதிலும் குறிப்பாக சிம்லா மாவட்டத்தில் சில சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று மாநிலத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்" என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples died for landslide in himachal pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->