ரயில்வே பணம் மோசடி - வங்கி ஊழியர்கள் 5 பேர் கைது.!  - Seithipunal
Seithipunal


ரயில்வே பணம் மோசடி - வங்கி ஊழியர்கள் 5 பேர் கைது.! 

இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கி வரும் அமைப்புகளில் ஒன்றான ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் (ஆர்.எல்.டி.ஏ) அமைப்பின் மூலமாக ரயில்வேவிற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிறுவனத்தின் பணம் 35 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வைக்க டெல்லியில் உள்ள பேங்க் ஆப் பரோடாவின், விஸ்வாஸ் நகர் கிளையில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த பணத்தின் மூலம் கிடைக்கும் வட்டியை மீண்டும் முதலீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த 35 கோடியில் 3.50 கோடி ரூபாயை மட்டும் வைப்பு தொகையாக வைத்துக்கொண்டு மீதமுள்ள 31.50 கோடி ரூபாயை வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாற்றி விட்டு மோசடி நடைபெற்று இருப்பதாக ஆர்.எல்.டி.ஏ அதிகாரிகள் கண்டறிந்தனர். 

பின்னர், இந்த மோசடி தொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டதில் வங்கியின் கிளை மேலாளர் ஜஸ்வந்த் ராய், ஆர்.எல்.டி.ஏவின் மேலாளர் விவேக் குமார் உட்பட ஐந்து பேர் பணத்தை வேறு போலி நிறுவனங்களுக்கு மாற்றி ஆதாயம் அடைந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் 5 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக டெல்லி, மும்பை, கோவா மற்றும் இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதில், மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று போலி நிறுவனங்களின் பேரில் இந்த பணத்தை மோசடியாக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five bank employees arrested for fraud railway fund


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->