குஜராத் : 10 மாடி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - நோயாளிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


10 மாடி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - நோயாளிகளின் கதி என்ன?

குஜராத் மாநிலத்தின் தலைநகரான அஹமதாபாத்தில் சாஹிபாக் என்ற பகுதியில் "ராஜஸ்தான்" என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. சுமார் 10 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தரைத்தளத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த 125 நோயாளிகள் அருகில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். 

இதற்கிடையே இந்தத் தீ விபத்துக் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in gujarat hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->