ஆன்லைனில் செல்போன் ஆர்டர் - முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஆன்லைனில் செல்போன் ஆர்டர் - முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவமொக்கா பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஆன்லைனில் தனது வீட்டுக்கு தேவையான பொருளை வாங்குவதற்காக பார்த்துக்கொண்டிருந்தபோது குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு செல்போன் கொடுப்பதாக விளம்பரம் இருந்தது. 

அந்த விளம்பரத்தைப் பார்த்த முதியவர் அந்த செல்போனை வாங்குவற்கு முடிவு செய்தார். அதன் படி முதியவர் அந்த விளம்பரத்தின் லிங்கை கிளிக் செய்து அதில் வங்கி கணக்கு விவரம் மற்றும் வீட்டின் முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்தார். 

இது தொடர்பாக தனது மகனிடமும் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் இது பொய்யான விளம்பரம் என்றும் பணம் பறிக்கும் கும்பல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனை நம்பாத முதியவர் வங்கிக்கு சென்று தனது கணக்கு விவரங்களை சரிபார்த்தார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதைக்கேட்டு முதியவர் அதிர்ச்சி அடைந்தார். 

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதியவர் சிவமொக்கா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அனலைனே மூலம் பணமோசடி செய்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifty thousand money fraud to old man for online shopping in karnataga


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->