பெங்களூர் : சிக்னல்களில் கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்த 55 பேர் மீட்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் போக்குவரத்து சிக்னல்களில் சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் பிச்சையெடுப்பது அதிகரித்து வந்தது.

அதிலும் குறிப்பாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து பிச்சை எடுப்பதாகவும் புகார்கள் வந்தது. இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என்று சமீபத்தில் பெங்களூரு போலீசாருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூர் நகரில் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சையெடுக்கும் நபர்களை பிடிப்பதற்கு மத்திய குற்றப்பிரிவு இணை காவல் ஆணையர் சரணப்பா தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 

அவர்கள் பெங்களூரு நகர் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுத்த தாய்மார்கள் உள்பட மொத்தம் 55 பேர் பிடிபட்டனர். 

இதையடுத்து பிடிபட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள், குழந்தைகள் நல காப்பகத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மாநில மகளிர் பாதுகாப்பு மையத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்கப்பட்டவர்கள் பிழைக்க வழியில்லாமல் பிச்சையெடுக்க வந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifty five beggers rescue in banglore signals


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->