லக்னோவில் சோகம்.! கடன் சுமையால் மகளின் திருமண நாளில் தந்தை தற்கொலை.! - Seithipunal
Seithipunal


லக்னோவில் மகளின் திருமண நாளில் கடன் தொல்லையால் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

லக்னோவில் உள்ள மோகன்லால்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவு மில் நடத்துபவராகவும் விவசாயியாகவும் இருந்தவர் சுனில் திவேதி. இவருக்கு ஐந்து மகள்களும், அங்கூர் என்ற ஒரே ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சுனிலின் மகள்களில் ஒருவரான நவ்யாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் மகளின் திருமண நாள் அன்று சுனில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் குடும்பத்தினர் அவரைக் கண்டித்துள்ளனர்.

இதையடுத்து அறைக்குச் சென்ற சுனில் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஆரைக்குள் சென்று பார்த்த போது சுனில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சூனியரின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சுனில் ஏற்கனவே தனது மூன்று மகள்களின் திருமணத்திற்காக கடன் வாங்கி இருந்ததாகவும், தற்போது நான்காவது மகளின் திருமணத்திற்கு கடன் வாங்கியதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father suicide in daughter wedding day in Lucknow


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->