இன்று நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்ச்சியின் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று தேநீர் விருந்து அளித்தார். 

இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதனை அடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை மற்றும் மாநிலங்களவை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 

இந்த நிலையில், இந்தியாவின் குடியரசு தலைவர்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்மு வருகின்ற 25-ஆம் தேதி இந்தியாவின் 15-ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farewell ceremony of outgoing President Ram Nath Kovind


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->