இந்தியாவிலேயே பென்ஷன் வாங்காத முதல் எம்.பி - ராஜ்யசபா தலைவர் பாராட்டு..!  - Seithipunal
Seithipunal


ராஜ்யசபா தலைவருக்கு முன்னாள் எம்.பி.,யினால்  பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி., ஜோதி. வழக்கறிஞரான இவர், முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் பல வழக்குகளை தலைமை தாங்கி நடத்தி, அதில், பல வழக்குகளில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அதன்பின் சசிகலா, ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட சில பிரச்னையால் அதிமுகவில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்துள்ளார். தற்போது, அரசியலிலிருந்து ஒதுங்கி வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார்.

இந்த காலத்தில், பென்ஷன், இலவச ரயில் பயணம் போன்ற சலுகைகளை உயர்த்த வேண்டும் என ஓய்வு பெற்ற எம்.பி.,க்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ஜோதி, தன் எம்.பி., பதவிக்கான ஓய்வு ஊதியத்தை வாங்க மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி அவருக்கு கிடைக்கும் ரயில் பயண சலுகை, மருத்துவ சலுகைகள் என்று எதையுமே அவர் பெற்றுக் கொள்ளவில்லை.

இந்த செயல் ராஜ்யசபா அலுவலகத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. பல வருடங்களாக ஜோதியின் பென்ஷன் பணம் அதிகமாக சேர்ந்துள்ளதால், இதை என்ன செய்வது என்று அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

அதிகாரிகள், இந்த விவகாரத்தை ராஜ்யசபா தலைவருமான, துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த தன்கர், இந்தியாவிலேயே ஜோதி ஒருவர் மட்டும் தான் பென்ஷன் வாங்காத முன்னாள் எம்.பி.,என்று பாராட்டியுள்ளார். 

ஜனாதிபதி, இதற்கு தீர்வு என்னவென்று அதிகாரிகளிடம் கேட்க, இந்த பணத்தை அரசிடம் வழங்க ராஜ்யசபாவில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex mp jothi not get pendion


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->