#BigBreaking | வாரிசு, குடும்ப அரசியலால் ஆட்சி இழந்து, கட்சி, சின்னத்தையும் இழந்த உத்தவ் தாக்கரே | அரியணை ஏறினார் ஏக்நாத் ஷிண்டே! - Seithipunal
Seithipunal


“சிவசேனா” என்ற கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னமான “வில் அம்பு”வையும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் தக்க வைத்துக் கொள்ள, இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர ஆளுங்கட்சியாக இருந்த சிவேசானாவின், குடும்ப அரசியலை எதிர்த்து அக்கட்சியில் உள்கட்சி மோதல் உண்டானது. இதில், கட்சி இரண்டாக பிரிய, 41 எம்எல்ஏ.,க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒன்றிணைந்தனர்.

தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக ஆதரவு கரம் நீட்டியதுடன், கூட்டணி வைத்து ஆட்சியையும் அமைத்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம்  30 ஆம் தேதி, ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராகவும், தேவேந்திர ஃபட்னாவிஸ் (பாஜக) துணைத் தலைவராகவும் பதவி ஏற்று கொண்டனர்.

இதற்கிடையே, சிவேசானா கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி 'தாங்கள் தான் உண்மையான சிவசேனா' என்று அங்கீகரிக்கவும், அக்கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை ஒதுக்கக் கோரியும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடத்த, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், சிவசேனாவின் தற்போதைய அரசியலமைப்பு ஜனநாயக விரோதமானது என்று இந்திய தேர்தல் ஆணையம் அவதானித்துள்ளது. 

தேர்தல் எதுவுமே இல்லாமல் ஒரு கோட்டரியைச் சேர்ந்தவர்களை ஜனநாயக விரோதமாக அலுவலகப் பொறுப்பாளர்களாக நியமிப்பது சிதைக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய கட்சி கட்டமைப்புகள் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறுகின்றன. 2018 இல் திருத்தப்பட்ட சிவசேனாவின் அரசியலமைப்பு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வற்புறுத்தலின் பேரில் மறைந்த பாலாசாஹேப் தாக்கரே கொண்டு வந்த 1999 ஆம் ஆண்டின் கட்சி அரசியலமைப்பில் ஜனநாயக விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் செயலை திருத்தங்கள் ரத்து செய்தன.

1999 இல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத சிவசேனாவின் அசல் அரசியலமைப்பின் ஜனநாயக விரோத நெறிமுறைகள் இரகசியமான முறையில் மீண்டும் கொண்டு வரப்பட்டு, கட்சியை ஒரு கேவலமாக மாற்றியதையும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commission Shiv Sena Bow and Arrow Eknath Shinde faction


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->