ஏக்நாத் ஷிண்டே கோரிக்கையை நிராகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்! உத்தவ் தாக்கரேவின் கோரிக்கை ஏற்பு! - Seithipunal
Seithipunal


மீண்டும் நாளை விண்ணப்பிக்குமாறு ஏக்நாத் ஷிண்டேவுக்கு அறிவுறுத்தல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனா கட்சியானது இரு அணிகளாக பிரிந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவு, உத்தவ் தாக்கரே தலைமையிலான பிரிவு என தற்போது இருந்து வருகின்றனர். இரு பிரிவினரும் தேர்தல் ஆணையத்தில் கட்சிக்கு உரிமை கோரிய நிலையில் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. 

சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிரிவால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடிக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனை அடுத்து பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு நவம்பர் மூன்றாம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

அந்த தேர்தலில் இரு தரப்பும் அவர்களின் கட்சிக்கு புதிய பெயரை தேர்வு செய்து தேர்தலில் போட்டியிட வேண்டும். இதற்கு புதிய தேர்தல் சின்னம் ஒதுக்கப்படும். அக்டோபர் 10ஆம் தேதி பிற்பகல் ஒரு மணிக்குள் தங்கள் விரும்பும் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையர் தினம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. உட்கட்சி பிரச்சனை தீரும் வரை இந்த உத்தரவு தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. 

இந்நிலையில் உத்தத் தாக்கரே தனது கட்சி சின்னமாக தீபச்சுடர், திரிசூலமும், உதயசூரன் சூரியன் சின்னம் அடங்கிய பட்டியலை சமர்ப்பித்தார். மேலும் கட்சியின் பெயரை சிவசேனா பாலா சாகேப் ஆணி தாக்கரே அல்லது சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே அணி என தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை வழங்கி இருந்தார்.

ஷிண்டே தரப்பினர் கடாயுதம், முரசு, வால் ஆகிய மூன்று சின்னத்தையும் பால் தாக்கரே மற்றும் சிவசேனா வருமாறு மூன்று பெயர்களையும் சமர்ப்பித்து உள்ளனர். உத்தவ் தாக்கரே அணிக்கு சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே எனும் பெயரையும் தீபச்சுடர் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கியுள்ளது. 

இதற்கிடையே மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தங்கள் அணிக்கு ஒதுக்குமாறு கூறிய மூன்று சின்னத்தையும் தேர்தலையும் நிராகரித்துள்ளது. நாளை புதிய சின்னங்களை விண்ணப்பிக்குமாறு ஏக்னாஸ்டிண்டை அணிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commission of India rejected Eknath Shinde request


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->