புதுச்சேரி: முதல்வரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து மின்துறை ஊழியர்களின் போராட்டம் வாபஸ்.!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கவும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு இருந்தது அதற்கான டெண்டரும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 28ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக துணை மின் நிலையங்களில் புகுந்த போராட்ட குழுவினர் மின்னிணைப்புகளை துண்டித்ததால் மக்களால் மாநிலம் இருளில் மூழ்கியது. பின்னர் அவசர களத்தில் இறங்கிய மின்துறையினர் இணைப்புகளை சரி செய்த பிறகு மின்வினியோகம் செய்யப்பட்டது. இந்த பணியினை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஐந்தாவது நாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கிராமப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனை கண்டித்து வில்லியனூர், ஒதயம்பட்டு, ஆரியபாளையம், சிலுக்காரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மின்துறை தயாராகியது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மின் துறை ஊழியர்களுடன் முதல்வர் பேச்சு வார்த்தைகள் நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

விரைவில் இந்த போராட்டம் வாபஸ் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eb employees protest comes end 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->