அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


அந்தமானின் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தியாவில் சமீப காலமாக பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் குறிப்பாக வட மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.

இதில், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரே நாளில் 4 முறையும், அடுத்த நாள் 3 முறை என தொடர்ச்சியாக 7 நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அந்தமானின் திக்லிப்பூர் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Andaman 3.9 rictor measurement


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->