திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் சாலையில் தஞ்சமடைந்த மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூகினியா தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லோரெங்காவ்  நகரை மையமாகக் கொண்டு, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகி உள்ளதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. 

லோரெங்காவ் நகரம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல நகரங்களில், இந்த சக்தி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில வினாடிகளுக்கு மேல் நீடித்து நிலநடுக்கத்தின் போது வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியது.

இதனால் மக்கள் பீதி அடைந்தனர். உடனே அவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள் வெளிவரவில்லை. மேலும் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earth quake in papua new guinea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->