மதுபானத்தில் வயகரா மாத்திரை கலந்து சாப்பிட்ட நபர்.. உடல் முழுவதும் செயலிழந்து உயிரிழப்பு.!
Drink alcohol and vayagara tablet man death in Maharashtra
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் (வயது 41) ஹோட்டல் அறையில் மயங்கி கிடப்பதாக அவசர உதவி எண்ணுக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி கிடந்த தொழிலதிபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் அந்த தொழிலதிபருடன் பெண் ஒருவர் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தது தெரிய வந்தது.
அதன் பின்னர், அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரவு அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க மது அருந்திவிட்டு 2 வயகரா மாத்திரைகள் எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. இதில் அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்து கொண்ட சிறிது நேரத்தில் தொழிலதிபர் மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மருத்துவமனை அளித்த பிரேத பரிசோதனையில் மது மற்றும் வயாகரா மருந்து ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்டதில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவர் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Drink alcohol and vayagara tablet man death in Maharashtra