உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 47 சதவீதமாக அதிகரிப்பு..!  - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் மாதம் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 2022 செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் மொத்த எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்து, 1.03 கோடியாக அதிகரித்துள்ளது. 

அதேபோன்று கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதம் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை இரண்டு சதவீதம் அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல், அனைத்து நிறுவனங்களின் பயணிகள் விமானங்களின் இருக்கைகள் நிரப்பப்படும் விகிதம், ஆகஸ்ட்டில் 72.5 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பரில் 77 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, விமான சேவை நிறுவனங்களில் முதல் இடத்தில் உள்ள இன்டிகோ நிறுவனத்தின் சந்தைப் பங்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் 57.7 சதவீதமாகவும்,  இரண்டாம் இடத்தில் 9.6 சதவீத சந்தைப் பங்குடன் விஸ்தாராவும்,  மூன்றம் இடத்தில் 8.7 சதவீத சந்தை பங்குடன் ஏர் இந்தியாவும் உள்ளன. அதேபோல், சரியான நேரத்தில் இயக்கப்படும் விமானங்கள் விகிதத்தில் முதல் இடத்தில் விஸ்தாரா நிறுவனம் 91 சதவீதத்துடன் உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

domestc flightes passenger increase 47 percentege


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->