அதிர்ச்சி! பெண் மூளையின் அருகே இருந்த 77 ஊசிகள்! அடுத்தடுத்து நடந்த ஆபரேஷன்! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் பெண் மண்டை ஓட்டியிலிருந்து 77 ஊசிகளை மருத்துவர்கள் எடுத்து பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா பெஹரா. இவருக்கு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்பட்டு அவதி ஊற்று வந்ததாக கூறப்படுகிறது. 19 வயதாகும் இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் உயிர் இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு தான் இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தது தெரிய வந்ததுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மந்திரவாதியை சந்தித்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு சில காரணம் ரேஷ்மா எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், ரேஷ்மா திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது தலைப்பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்தபோது ரேஷ்மா தலையில் ஊசிகள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரேஷ்மா தலையில் இருந்த ஊசிகளை எடுக்கப்பட்டது. விம்சார் மருத்துவமனையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் ரேஷ்மா தலையில் இருந்து மொத்தம் 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுவரை அறுவை சிகிச்சைகளில் மூலம் 77 ஊசிகள் ரேஷ்மா தலையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. நல் வாய்ப்பாக ஊசி எதுவும் எழும்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தவில்லை. மாறாக தசை பகுதியில் லேசாக காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது. விம்சார் மருத்துவமனை இயக்குனர் பாப்ராஹி ரத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Doctors remove 77 needles from woman skull in Odisha


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->