மத்தியில் முக்கிய பொறுப்புகளை பெற்ற திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! - Seithipunal
Seithipunal


நிலை குழு தலைவர்களாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமனம்!

நிலைக்குழு என்பது இந்திய நாடாளுமன்றத்தின், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. ஆண்டுதோறும் மக்களவைத் தலைவர் அல்லது மாநிலங்களவைத் தலைவர் ஆகியவர்களால் தேர்தல் அல்லது நியமன முறையில் நாடாளுமன்ற குழு உருவாக்கப்படுகிறது. நிலைக்குழு மற்றும் தற்காலிக் குழு என இரு வகை குழுக்கள் உருவாக்கப்படும். நாடாளுமன்ற நிலைக்குழு ஆண்டுதோறும் அமைக்கப்படுகிறது.

தற்காலிகக் குழுகள் குறிப்பிட்ட செயலுக்காக நிறுவப்படுகிறது. செயல்கள் முடிவுற்ற பின் தற்காலிகக் குழு தானகவே கலைந்து விடும். மத்திய அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் நிலைகுழுவிற்கு அனுப்பி அனைத்து கட்சிகளின் சார்பிலும் விவாதம் செய்யப்படும். பின்னர் அந்த விவாதத்தின் பேரில் முடிவுகள் எட்டப்பட்டு நிறைவேற்றப்படும்.

இன்னலையில் மத்திய தொழில்துறையின் நாடாளுமன்ற நிலை குழு தலைவராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் தொழில்துறையின் மூலம் அளிக்கப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நிலைக்குழு உறுப்பினர்கள் இவரது தலைமையில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

அதேபோன்று மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி துறையின் நிலை குழு தலைவராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் சார்பில் அளிக்கப்படும் திட்டங்கள் குறித்து நிலை குழு உறுப்பினர்களுடன்  கனிமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று பரிந்துரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிலை குழு தலைவர் பதவியை வழங்கியுள்ளது. மாநிலத்தில் எதிரி கட்சிகளாக இருந்தாலும் மத்தியில் எதிர்க்கட்சிகளாகவே திமுகவும் பாஜகவும் செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK parliamentarians appointed as level committee leaders


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->