சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு.! - Seithipunal
Seithipunal


கார்த்திகை மாதம் தொடங்கிவிட்ட நிலையில் பலரும் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதமிருந்து மலைக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், அஜித் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சபரிமலையில் கோவிலுக்கு பயணம் செய்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித் ரசிகர்கள் துணிவு பட போஸ்டரை எடுத்துச்சென்ற நிலையில், சபரிமலையில் வைத்து சாமி தரிசனம் செய்துவிட்டு அது குறித்த புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் பதிவு செய்தனர். 

இந்நிலையில் அதனைப் போலவே தற்போது விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி பண்ருட்டியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் வாரிசு பட போஸ்டருடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

இந்த விஷயம் ஐயப்ப சுவாமியின் பக்தர்களிடையே கடும் எரிச்சலை உண்டாக்கிய நிலையில், சாமி கும்பிட செல்லும் இடத்தில் சினிமாவை ஓரங்கட்டிவிட்டு வாருங்கள் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றம், சபரிமலை கோவிலுக்குள் சினிமா போஸ்டர் மற்றும் பேனர்கள் எடுத்துவருவது, இசைக்கருவிகள் இசைப்பதற்கு தடை விதிக்குமாறு சபரிமலை தேவசம் போர்டுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு நல்ல முறையில் கடவுளை வழிபட உரிமை உள்ளது. ஆனால் அது கோயிலின் நடைமுறை மற்றும் பாரம்பரியத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees not allowed cinema Posters in sabarimalai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->