சரக்கடித்த களைப்பில் உறக்கம்.. சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நின்ற விரைவு இரயில்கள்.! - Seithipunal
Seithipunal


இரயில் நிலைய கண்காணிப்பு அதிகாரி மதுபோதையில் உறங்கியதால், முன்னேறிச்செல்ல அனுமதி கிடைக்காமல் இரயில்கள் பாதிவழியில் நின்ற சம்பவம் நடந்துள்ளது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கஞ்சவுசி இரயில் நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையத்தின் வழியாக டெல்லி - ஹவுரா அதிவிரைவு வண்டி இரயில் சேவை இயக்கப்படுகிறது. 

இந்நிலையில், கஞ்சவுசி இரயில் நிலைய தலைமை அதிகாரி சம்பவ தினத்தன்று மதுபோதையில் பணிக்கு வந்த நிலையில், பணியின் போது மதுபோதையில் உறங்கியுள்ளார். இதன்போது, அவ்வழியாக டெல்லியில் இருந்து ஹவுரா செல்ல வந்த இரயில், முன்னேறி செல்ல அனுமதி சமிக்கை கிடைக்காமல் நடுவழியில் நின்றுள்ளது. 

இரயில்கள் சமிக்கை கிடைக்காமல் நிற்பது தொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரியவரவே, அவர்கள் விரைந்து செயல்பட்டு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். இதனால் அவ்வழியாக வழக்கமாக செல்லவேண்டிய இரயில்கள் அனைத்தும் ஒன்றரை மணிநேரம் தாமதமாக சென்றது. 

பணிநேரத்தில் மதுபோதையில் உறங்கிய பணியாளரின் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த இரயில்வே நிர்வாகம், சம்பந்தப்பட்ட பணியாளரை பணியிடைநீக்கம் செய்துள்ளது. நல்ல வேலையாக பிற அதிகாரிகள் சுதாரித்ததால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi to Howrah Train Late due to Get Signalling Problem Station Master Sleeps Alcoholic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->