கடனை கட்டாத வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி வரும் சாக்லெட்! நூதன திட்டத்தை அமல்படுத்திய வங்கி! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன் தவணைகளை உரிய நேரத்தில் திருப்பி தராத வாடிக்கையாளர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று சாக்லேட் வழங்கும் நூதன திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. 

இது குறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது, 'கடன் பெற்றவர்களுக்கு மாதாந்திர தவணை காலம் கடந்த பிறகும் தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு வங்கி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து வருகிறது. 

அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளர்கள் ஏற்க மறுத்தால் அவர்களுக்கு கடனை திருப்பி செலுத்தும் நோக்கம் இல்லை என கருதப்படுகிறது. 

இதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் கடன் தவணைகளை வசூலிப்பதற்கு அவர்களது இல்லத்திற்கோ அல்லது அவர்கள் பணியாற்றும் அலுவலகத்திற்கோ எந்த ஒரு அறிவிப்பும் இன்றி நேரில் சென்று தொடர்பு கொள்வது சிறந்த வழியாகும். 

அதற்காக வாடிக்கையாளர்களின் இல்லத்திற்கு வசூல் செய்ய செல்லும் அதிகாரிகளிடம் சாக்லேட் கொடுத்து அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

customers do not pay debts home for Chocolate 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->