இந்தியாவில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. ஜூன் 8 முதல் திறக்க அனுமதி.. மகிழ்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

ஜூன் 8ஆம் தேதி முதல் வழிப்பாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி. ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களையும் ஜூன் 8 முதல் திறக்க மத்திய அரசு அனுமதி. மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்.

கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி. தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும். தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், சூழலை பொறுத்து திறக்க அனுமதி .இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது.

நாடு தழுவிய அளவில் குறிப்பிட்ட வகை பிரிவுகளுக்கு மட்டுமே தடை இருக்கும். நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வும் கிடையாது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

curfew extension in india till 30th june


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->