சுடுகாட்டில் இருந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய தம்பதியினர் - மஹாராஷ்டிராவில் நடந்த வினோத திருமணம்.! - Seithipunal
Seithipunal


சுடுகாட்டில் இருந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய தம்பதியினர் - மஹாராஷ்டிராவில் நடந்த வினோத திருமணம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் மாவட்டம் ரகாதா பகுதியை சேர்ந்தவர் கங்காதர் கெய்க்வாட். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ரகாதா பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டில் பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில் கங்காதரர் தன மகள் மயூரியின் திருமணத்தை தான் வேலை செய்து வரும் சுடுகாட்டிலேயே நடத்தியுள்ளார். இந்தத் திருமணத்தில் குடும்பத்தினர், ஊர் மக்கள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர். 

இது தொடர்பாக கங்காதர் கெய்க்வாட் கூறுகையில், "நான் 20 ஆண்டுகளாக இங்கு தான் உள்ளேன். எனது மகள் இங்கு தான் வளர்ந்தாள். இங்கிருந்து தான் படித்தாள். எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்தது இந்த சுடுகாடு தான். அதனால் தான் இங்கேயே திருமணத்தை நடத்தினோம்" என்றுத் தெரிவித்தார்.

இதற்கிடையே சுடுகாட்டில் நடந்த திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து சமூக ஆர்வலர்கள் மூடப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திருமணம் அமைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

மனிதர்கள் தங்கள் வாழ்க்கை பயணத்தை முடித்து கொள்ளும் சுடுகாட்டில் இருந்து இந்த தம்பதி தங்களது இல்லற வாழ்க்கையை தொடங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couples get married at graveyard in maharastra


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->