கொரோனாவால் பாதித்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும்: அரசு அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் ஜேஎன்1 என்ற புதிய வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் தொடர்பாக கர்நாடகா அரசின் அமைச்சரவை துணை குழு தடுப்பு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 

அதன்படி, பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பேணுதல், ஜே என் 1 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதல் போன்றவை கடைபிடிப்பது அவசியம். 

மேலும் தொற்று அறிகுறிகளுடன் உள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இருப்பினும் அரசு, புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. இது குறித்து விரிவான வழிகாட்டுதலை அரசு வெளியிடும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona affected People isolated Government order


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->