காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களால் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கூடிய விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

கடைசி பட்ஜெட் கூட்டத்தில் தொடரில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் கர்நாடக முதல்வருமான சித்தராமையா காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். சித்தராமய்யாவை போன்று மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

இதற்கு காரணம் கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலின் பொழுது பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் காதில் பூ வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் காதில் பூ வைத்துக்கொண்டு சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். 

மேலும் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து சட்டப்பேரவையில் உரையாற்றிய பசவராஜ் பொம்மை கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ராம் நகர் பகுதியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படும் என அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத பசவராஜ் பொம்மை ராமர் கோயில் கட்டப்படும் என அறிவித்ததற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MLAs came to Karnataka Assembly with flowers in their ears


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->