பாஜகவுக்கு தாவும் காங்கிரஸ் தலைவர்கள் - அதிர்ச்சி கொடுத்த ராணா கோஸ்வாமியின் செயல்.! - Seithipunal
Seithipunal


அசாம் ஜோர்ஹாட்டின் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஆகவும், அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் செயல் தலைவராக இருந்து வந்தவர் ராணா கோஸ்வாமி. இவர் இன்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன் தனது தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

இந்த ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு அவர் அனுப்பியுள்ளார். மேலும், புதுடெல்லிக்கு சென்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பா.ஜ.க.-வில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும் போது "தனக்கு இது பற்றி எந்த தகவலும் வரவில்லை. ஆனால் அவர் காங்கிரஸின் சக்திவாய்ந்த தலைவர். அவர் பா.ஜ.க.-வில் இணைந்தால், நான் அதை வரவேற்பேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress leader rana goswami joined bjp


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->